February 22, 2025
தேசியம்
செய்திகள்

Ontario அரசின் தனியார் பராமரிப்பு முதலீட்டு திட்டம்

அறுவை சிகிச்சை பின்னடைவை குறைப்பதற்காக தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான மூன்று படி திட்டத்தை Ontario அரசாங்கம் வெளியிட்டது.

Ontario மாகாண சுகாதார அமைச்சர் Sylvia Jones திங்கட்கிழமை (16) இதற்கான அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த அறிவித்தல் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், அறுவை சிகிச்சை பின்னடைவுகளை அகற்றவும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு சில இலாப நோக்கற்ற சமூக அறுவை சிகிச்சை, நோயறிதல் மையங்கள் அதிக பொறுப்புகளை ஏற்க வழிவகுக்கும் எனவும் அமைச்சர் Jones கூறினார்.

இதற்கான சட்ட மாற்றங்கள், பின்னடைவைச் சமாளிக்க ஒரு தற்காலிக நடவடிக்கை அல்ல, என முதல்வர் Doug Ford இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தினார்.

அறுவை சிகிச்சை, நோயறிதல் மையங்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படும் என்ற தகவலை வெளியிட முதல்வரும், சுகாதார அமைச்சரும் மறுத்துவிட்டனர்.

Related posts

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Christy Clark

Lankathas Pathmanathan

Ottawa போராட்டங்கள் குறித்த விசாரணை தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment