COVID தொற்று காலத்தில் மது, போதைப்பொருள் பாவனையால் அதிக எண்ணிக்கையானவர்கள் இறந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை (12) இந்த தகவலை வெளியிட்டது.
மது தொடர்பான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இளைய தலைமுறையினர் மத்தியில் பதிவாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு மது காரணமாக 3,200 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஒரு வருடத்தின் பின்னர் இந்த எண்ணிக்கை 3,790 ஆக அதிகரித்தது, பின்னர் 2021 இல் 3,875 ஆக அதிகரித்தது.
2019 முதல் 2020 வரையிலான 18 சதவீத அதிகரிப்பு கடந்த 20 ஆண்டுகளில் பதிவான ஒரு ஆண்டுக்கான மிகப்பெரிய மாற்றமாகும் என புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை January 2022 இன் மூன்றாவது வாரம் COVID தொற்றின் அதிக எண்ணிக்கையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
March 2020 முதல் August 2022 வரை கனடாவில் 53,741 அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளது
ஒரு தொற்று நிகழாமல் இருந்திருந்தால் எதிர்பார்த்ததை விட இது 7.6 சதவீதம் அதிகமானதாகும்.
இந்த காலகட்டத்தில், குறைந்தது 42,215 இறப்புகளுக்கு COVID தொற்று நேரடியாக காரணம் என கூறப்படுகிறது.