February 22, 2025
தேசியம்
செய்திகள்

விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!

கனடாவின் விமானப் போக்குவரத்து புதன்கிழமை (11) கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் எதிர்கொண்ட கணினி செயலிழப்பின் எதிரொலியாக கனடாவும் பாதிப்பை எதிர்கொண்டது.

இந்த செயலிழப்பு எந்த விமான தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை என கனடாவின் விமானப் போக்குவரத்து சபை தெரிவித்தது.

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்படும் சில விமானங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் சேவைகள் படிப்படியாக மீண்டும் செயல்பட ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செயலிழப்பு குறித்து அவதானித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார்.

இந்த செயலிழப்பு எல்லை கடந்த விமான பயணங்களை பாதிக்கும் என கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பெரும்பகுதியான விமான சேவைகளை வழங்கும் Air Canada கூறியது.

Related posts

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

உக்ரைன் குறித்து கலந்துரையாட அமெரிக்க பயணமான கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

TTC streetcar தடம் புரண்டதில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment