கனடிய விமானப்படையின் உபயோகத்திற்காக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (09) இதனை உறுதிப்படுத்தினார்.
Royal கனேடிய விமானப்படையின் CF-18 விமானங்களுக்கு பதிலாக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
இந்த கொள்வனவுக்கு அமெரிக்க F-35 தயாரிப்பாளருடன் கனடா ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்.
16, F-35 விமானங்களின் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர் நிதி உதவியை தேசிய பாதுகாப்புத் துறை பெற்றதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
மேலும் 72 F-35 ரக விமானங்கள் அடுத்த ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் கனடாவின் எதிர்ப்பு விமானங்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆக அதிகரிக்க உள்ளது.
88 விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கான செலவை சுமார் 19 பில்லியன் டொலர் என அமைச்சர் அனிதா ஆனந்த் நிர்ணயித்தார்.