சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனையை கோரும் விதி முறை வியாழக்கிழமை (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகிய நாடுகளை விட்டு வெளியேறும் விமானப் பயணிகள், இன்று முதல் கனடாவிற்குள் நுழையும் போது, எதிர்மறையான COVID சோதனைக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.
சீனாவில் COVID தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது
இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு வயதிற்கும் மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளுக்கும் இந்த சோதனை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மீது விதிக்கப்பட்ட கனடிய அரசின் இந்த கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.