February 23, 2025
தேசியம்
செய்திகள்

புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு  திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை

கனடாவில் புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு  திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை என அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஓய்வூதியம்  பெறும் நிலையில், கனடாவின் வீட்டு விநியோகத்தை அதிகரிக்க திறமையான புலம்பெயர்ந்தோரின் தேவையை அமைச்சர் வலியுறுத்துகின்றார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில்  மத்திய அரசாங்கம் தனது குடியேற்ற இலக்குகளை அதிகரிக்க முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம் என அமைச்சர் Hussen கூறினார்.
கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழில் வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டுக்குள், வருடாந்தம் 500 ஆயிரம் பேர் கனடாவுக்கு புலம்பெயர்வதை காண மத்திய அரசாங்கம்  விரும்புவதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Durham காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Lankathas Pathmanathan

தேர்தலில் இருந்து விலகும் மேலும் இரு வேட்பாளர்கள்!

Gaya Raja

Leave a Comment