தேசியம்
செய்திகள்

B.C. பேரூந்து விபத்தில் நால்வர் பலி

British Colombia மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (24) நிகழ்ந்த பேரூந்து விபத்தில் நால்வர் பலியாகினர்.

British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் மொத்தம் 53 பேர் காயமடைந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நால்வர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்தனர்

ஆனாலும் மரணமடைந்தவர்களின் விபரங்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

மரணமடைந்தவர்களில் இந்தியாவை சேர்ந்த 41 வயதான ஒருவரும் அடங்குவதாக உறவினர்கள் மூலம் தெரியவருகிறது.

41 வயதான Karanjot Singh Sodhi என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு பனி நிறைந்த சாலைகளே காரணம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்

இந்த விபத்து குறித்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக British Colombia முதல்வர் David Eby, பொது பாதுகாப்பு அமைச்சர் Mike Farnworth, சுகாதார அமைச்சர் Adrian Dix, போக்குவரத்து அமைச்சர் Rob Fleming ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

Related posts

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Quebec மாகாண தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment