December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID விதிகளை மீறியதற்காக $15 மில்லியன் அபராதம்

COVID தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக கனடியர்களுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

2022 இல் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Eric Duncan முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தரவுகளை பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

ஆனாலும் இந்த அபராதத்தில் செலுத்தப்பட்ட தொகையில் குறித்த தரவுகள் எதுவும் வெளியாகவில்லை.

January முதல் August மாதம் வரை மத்திய தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் 3,614 அபராத சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த எட்டு மாத காலத்தில் Ontario மாகாணத்தில் மாத்திரம் 2,672 அபராத சீட்டுகள் வழங்கப்பட்டன.

பொது சுகாதார நிறுவன தரவுகளில் British Columbia, Ontario, Manitoba, Atlantic கனடா ஆகியவை அடங்குகின்றன.

இதில் Quebec, Saskatchewan, Alberta அல்லது territories என்ப்படும் பிரதேசங்களின் தரவுகள் உள்ளடக்கப்படவில்லை.

Related posts

New Brunswick மாகாணத்தில் புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

Gaya Raja

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

Lankathas Pathmanathan

சரக்கு வாகன ஓட்டுனர்களின் போராட்டம் வன்முறையாக மாறக்கூடும்: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment