கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பிரதேசத்திலும் குறைந்தது ஒரு வானிலை எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
Ontario, Quebec, British Colombia மாகாணங்களில் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.
Vancouver, Toronto, Montreal உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அனைத்து Niagara போக்குவரத்து பாலங்களும் மூடப்பட்டுள்ளன.
Prince Edward Island – New Brunswick இடையிலான Confederation பாலம் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
உறைபனி மழை, வெள்ளம் குறித்த எச்சரிக்கைகள் British Colombia மாகாணத்தில் வெளியிடப்பட்டுள்ளன.