கனடா முழுவதும் உள்ள அனேக மாகாணங்கள் பிரதேசங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமைக்கான (23) சிறப்பு வானிலை அறிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
Manitoba தவிர, கனடாவின் ஏனைய மாகாணங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுச்சூழல் கனடாவின் எச்சரிக்கையும் சிறப்பு வானிலை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குளிர்கால புயல் கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனி பொழிவை ஏற்படுத்துகிறது.
Ontarioவில் நத்தார் தினத்திற்குள் 40 centimetre வரையிலான பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
பனிப்புயல் எச்சரிக்கை காரணமாக Ontarioவில் பல பாடசாலை வாரியங்கள் வெள்ளிக்கிழமை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளது.
Quebecகின் சில பகுதிகளிலும் 40 centimetre வரையிலான பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
பெரும் பனிப்புயலுக்கு முன்னதாக, Toronto Pearson சர்வதேச விமான நிலையம், Vancouver சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
வெள்ளியன்று Ontario, Quebec மாகாணங்களை தாக்கும் பனிப்புயல் சனிக்கிழமை Atlantic மாகாணங்களை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.