வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை விதிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கனடிய Mortgage, Housing கழகம் இந்த விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த விதிமுறை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.
இதன் மூலம் வெளிநாட்டவர்களும், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
கடந்த June மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த தடைநிறைவேற்றப்பட்டது.