தேசியம்
செய்திகள்

யாழ். வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கனடியத் தமிழர் பேரவையின் நிதி சேர் நடை பவனி ஊடாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிதி சேர் நடை பவனி இந்த வருடம் September 11ஆம் திகதி நடைபெற்றது

இம்முறை சேகரிக்கப்படும் நிதியில் இருந்து இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி, தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்து பொருட்கள் வழங்குவதென திட்டமிடப்பட்டது.

இதன் முதற்கட்டமாக முதல் தொகுதி மருந்துப் பொருட்கள் செவ்வாய்கிழமை (20) தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் ஏனைய ஐந்து மருத்துவமனைகளுக்கும் நன்கொடைகள் வழங்க ஏற்பாடாகியுள்ளது.

Related posts

Ontarioவில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,135ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan

கனடிய எல்லைக் கட்டுப்பாடுகள் September 30 வரை நீட்டிப்பு

Leave a Comment