February 22, 2025
தேசியம்
செய்திகள்

Albertaவில் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இலங்கையர்

குழந்தைகளுக்கு எதிராக அதிக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக Albertaவில் இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

21 வயதான இரமேஷ் ரட்நாயக்க மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின.

ஆறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட இவர் மீது இன்று மேலதிகமாக 18 குற்றங்கள் பதிவாகின

கடந்த July மாதம் முதலில் கைது செய்யப்பட்ட இவர் நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

இந்த மாதம் 9 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரினால் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு Alberta Law Enforcement Response Teams (ALERT) கோரியுள்ளது.

Related posts

Vancouver கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Washington பயணமாகும் Justin Trudeau!

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment