கனேடியர்கள் தங்கள் COVID தடுப்பூசிகளை முழுமையாக பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Theresa Tam இந்த ஆலோசனையை வழங்கினார்.
விடுமுறை கால சுகாதார ஆலோசனையாக இது வெளியாகியுள்ளது.
COVID தடுப்பூசிகளை மாத்திரமல்லாமல் காய்ச்சல் தடுப்பூசிகளையும் பெறுமாறு அவர் கனேடியர்களை வலியுறுத்தினார்.
தவிரவும் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டில் இருக்கவும் அவர் கனடியர்களை வலியுறுத்தினார்.
மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இல்லாத முதலாவது விடுமுறை காலம் இதுவாகும்.