கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருங்கி உறவை விரும்புவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளுடன் இருப்பது போல் கொரியா, ஜப்பானுடன் நெருக்கமாக இருக்க கனடா நம்பிக்கை கொண்டுள்ளது என அமைச்சர் Melanie Joly கூறினார்.
கனடிய அரசாங்கத்தின் புதிய Indo-Pacific மூலோபாயம் குறித்து இன்று பேசுகையில் அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார்.
கனடிய அரசாங்கம் அதன் Indo-Pacific மூலோபாயத்தை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது.
இந்த மூலோபாயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.3 பில்லியன் டொலர் நிதியுதவியை உள்ளடக்கியது.