கனடிய பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
Justin Trudeauவுக்கும் François Legaultடிக்கும் இடையிலான இந்த சந்திப்பு Montreal நகரில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
கடந்த சில நாட்களாக Ontario, Quebec உட்பட பல மாகாணங்களில் தொடரும் பனிப்புயல் காரணமாக இந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
சுகாதார இடமாற்றங்கள், குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் விவாதிக்க இருந்தனர்
இந்த நிலையில் இருவரும் தொலைபேசியில் உரையாடுவார்கள் என தெரிவித்த பிரதமரின் பேச்சாளர், பின்னர் ஒரு நாளில் நேரடி சந்திப்பு ஏற்பாடாகும் என கூறினார்.