தேசியம்
செய்திகள்

முக்கிய அடமான அழுத்த சோதனை விகிதத்தில் மாற்றம் இல்லை

மத்திய வங்கி கட்டுப்பாட்டாளர்கள் முக்கிய அடமான அழுத்த சோதனை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

காப்பீடு செய்யப்படாத அடமான கடன்களுக்கான முக்கிய அழுத்த சோதனையில் பயன்படுத்தப்படும் வட்டி விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க வங்கி கட்டுப்பாட்டாளர்கள் வியாழக்கிழமை (15) முடிவு செய்தனர்.

காப்பீடு செய்யப்படாத அடமானங்களுக்கான குறைந்தபட்ச தகுதி விகிதம், அடமான ஒப்பந்த விகிதத்தை விட இரண்டு சதவீத புள்ளிகள் அல்லது 5.25 சதவீதம் அதிகமாக இருக்கும் என நிதி நிறுவனங்களின் கண்காணிப்பாளர் அலுவலகம் கூறுகிறது.

காப்பீடு செய்யப்படாத அடமானங்கள் என்பது 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட முன்பணம் செலுத்தும் குடியிருப்பு அடமான கடன்களாகும்.

Related posts

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை மேலும் உயரலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment