புதிய ஆண்டில் COVID தொற்றின் அதிகரிப்பை எதிர் கொள்ளலாம் என தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam புதன்கிழமை (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.
நாடு COVID அலையின் உச்சத்தை கடந்துவிட்ட நிலையிலும் எங்கள் பாதுகாப்பைக் குறைப்பதற்கான நேரம் இதுவல்ல என அவர் கூறினார்.
நோய் எதிர்ப்பு சக்தியின் மக்கள் தொகை நிலை மாறுபாடுகள், தற்போதைய உலகளாவிய போக்குகள் புதிய ஆண்டில் தொற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என Tam கூறினார்.
கனடாவில் வெளியாகும் நோயெதிர்ப்பு மாறுபாடுகளின் அதிகரிப்பையும் அவர் மேற்கோள் காட்டினார்.