தேசியம்
செய்திகள்

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தலில் ஆளும் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட Charles Sousa வெற்றி பெற்றார்.

51 சதவீதமான வாக்குகளை பெற்ற அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இந்தத் தேர்தல் திங்கள்கிழமை (12) நடைபெற்றது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரான Sousa, Ontario Liberal அரசின் முன்னாள் நிதி அமைச்சராக இருந்தவராவார்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Conservative கட்சியின் சார்பில் உள்ளூர் காவல்துறை அதிகாரி Ron Chhinzer போட்டியிட்டார்.

NDP சார்பில் முன்னாள் மாகாண தொகுதி உதவியாளர் Julia Kole போட்டியிட்டார்.

கடந்த May மே மாதம் Liberal கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Sven Spengemannஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிய பதவி விலகியதையடுத்து அந்த தொகுதியின் ஆசனத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

 

Related posts

B.C. அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

இரண்டு கனேடியர்களை நாடு கடத்துவதற்கு இந்தியா கோரிக்கை?

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment