ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்தார்.
ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கனடா இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக Joly அறிவித்தார்.
மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருக்கும் மொத்தம் 67 தனிநபர்கள், 9 நிறுவனங்கள் மீது இந்த தடைகள் அறிவிக்கப்பட்டன.
அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்பட வேண்டும் என இந்த தடைகளை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் கூறினார்.