தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Liberal அரசாங்கத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள தயாராக உள்ளதாக NDP தலைவர் அச்சுறுத்தியுள்ளார்.

சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் Liberal அரசாங்கத்துடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக Jagmeet Singh திங்கட்கிழமை (12) தெரிவித்தார்.

சுகாதாரப் பாதுகாப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது என திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Singh கூறினார்.

பிரதமர் Justin Trudeau மாகாண, பிராந்திய முதல்வர்களை சந்தித்து சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என தான் விரும்புவதாக Singh கூறினார்.

Liberal அரசாங்கத்திற்கும் NDP கட்சிக்கும் இடையில் கடந்த March மாதம் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.

2025ஆம் ஆண்டுக்குள் மீண்டும் தேர்தல் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக முக்கிய வாக்களிப்புகளில் சிறுபான்மை அரசாங்கத்திற்கு NDP ஆதரவளிக்க இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

இந்த நிலையில் சுகாதாரப் பாதுகாப்புக்காக மாகாணங்களுக்கு அதிக பணத்தை வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் Trudeau திங்கட்கிழமை கூறினார்.

Related posts

புகையிரத, விமான போக்குவரத்து சவால்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Lankathas Pathmanathan

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

Lankathas Pathmanathan

ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment