February 22, 2025
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறாத செவிலியர்களை பணியமர்த்துவதுமா Ontario?

தடுப்பூசி பெறாத செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து Ontario மாகாணம் ஆலோசித்து வருகிறது.

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது.

சுவாச நோய்களின் அதிகரிப்பு , அவசர சிகிச்சை பிரிவுகளின் சேவை தடை, நீண்ட காத்திருப்பு நேரங்கள் ஆகிய சவால்களை மாகாண ரீதியில் மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் நிலையில் இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது.

பெரும்பாலான மாகாணங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி கட்டுப்பாடுகளை கைவிட்டன.

ஆனாலும் Ontario, Nova Scotia, British Colombia ஆகிய மாகாணங்கள் தடுப்பூசி கட்டுப்பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

Related posts

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

Lankathas Pathmanathan

Leave a Comment