Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது.
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (09) ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
புதன்கிழமை (07) ஒரு லிட்டர் எரிபொருள் விலை 140.9 சதமாக குறைந்தது.
எரிபொருள் விலை வியாழக்கிழமை (08) மேலும் இரண்டு சதத்தினால் குறைந்து 138.9 சதமாக விற்பனையாகவுள்ளது.
வெள்ளிக்கிழமை மேலும் மூன்று சதத்தினால் குறைந்து எரிபொருளின் விலை லிட்டருக்கு 135.9 சதமாக விற்பனையாகும் என எதிர்வு கூறப்படுகிறது.