கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதத்தை 4.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி புதன்கிழமை (07) வட்டி வீதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஒன்பது மாதங்களில் கனடிய மத்திய வங்கியால் ஏழாவது தடவையாக ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பை குறிக்கிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 0.25 சதவீதமாக இருந்த வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதம் இறுதியாக 3.75 சதவீதமாக அதிகரிக்கபட்டிருந்தது.
புதனன்று மத்திய வங்கி அதன் வட்டி வீதத்தை 0.5 சதவீதத்தால் அதிகரித்து, 4.25 சதவீதமாக அறிவித்துள்ளது .
இறுதியாக மத்திய வங்கியின் வட்டி வீதம், 2008ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 4.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தைக் குறைப்பதற்கு வட்டி வீதங்களை மத்திய வங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பணவீக்க வீதம் மத்திய வங்கியின் 2 சதவீத இலக்கை விட, October மாதத்தில் 6.9 சதவீதமாக உயர்ந்தது.