கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) மற்றும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ளது.
தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வை பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளை மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கால் அல்லது அரை சதவீதம் உயர்த்தும் என எதிர்வு கூறப்படுகிறது.
தற்போது கனடிய மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் 3.75 சதவீதமாக உள்ளது.
இறுதியாக October மாதம் வட்டி விகித அதிகரிப்பு வெளியானபோது மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பை மத்திய வங்கியின் ஆளுநர் நாயகம் எதிர்வு கூர்ந்திருந்தார்.
இந்த ஆண்டு வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை அடுத்து, மத்திய வங்கி March மாதம் முதல் தொடர்ந்து ஆறு முறை அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.