December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண NDP தலைவராக பதவியேற்கும் Marit Stiles

Ontario மாகாண NDP தலைவராக Marit Stiles பதவியேற்க உள்ளார்.

தலைமை பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடிவடைந்த நிலையில் தனது பெயரை பதிவு செய்த ஒரே வேட்பாளராக Stiles உள்ளார்.

திங்கட்கிழமை (05) இரவு NDP தலைமை பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் முடிவடைந்தது.

Ontario NDP கட்சியின் இடைக்காலத் தலைவராக Peter Tabuns தற்போது பதவி வகிக்கின்றார்.

இவரிடமிருந்து பதவியேற்பதற்கு முன்னர், Stiles கட்சி உறுப்பினர்களிடமிருந்து உறுதிப்படுத்தல் ஆதரவை பெற வேண்டும்.

செவ்வாய்க்கிழமை (06) மாகாண சபையில் NDP கட்சியின் அடுத்த தலைவராக Stiles அறிமுகப்படுத்தப்பட்டார்.

Related posts

நான்கு தொகுதிகளில் அடுத்த மாதம் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment