மூத்த ஈரானிய அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக புதிய தடைகளை கனடா விதித்துள்ளது.
மனித உரிமைகளை மீறியதற்காக நான்கு ஈரானிய நபர்கள், ஐந்து நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் தடைகளை விதித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
October மாதம் முதல் தொடரும் ஈரானிய ஆட்சிக்கு எதிரான கனடாவின் பொருளாதார தடைகளில் ஒரு பகுதி இதுவாகும்.
ஈரான் மக்களுடன் எங்கள் ஒற்றுமையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.