கடந்த May மாதம் முதற்குடியின பெண்ணை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட Jeremy Anthony Michael Skibicki மீது மேலும் மூன்று கொலை குற்றச்சாட்டுக்களை Winnipeg காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இரண்டு முதற்குடியின பெண்கள், ஒரு அடையாளம் தெரியாத பெண் என மேலும் மூவர், தொடர் கொலையாளி என காவல்துறையினர் குற்றம் சாட்டும் நபரினால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை (01) மாலை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை Winnipeg காவல்துறையினர் வெளியிட்டனர்.
35 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் Jeremy Anthony Michael Skibicki மீது ஏற்கனவே கடந்த May மாதம் கொலை குற்றச்சாட்டு ஒன்று பதிவாகியது.
புதிதாக அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுக்கள் இந்த ஆண்டு March முதல் May மாதங்களுக்குள் நிகழ்ந்த கொலைகள் தொடர்பானவை என காவல்துறையினர் தெரிவித்தனர் .