Prince Edward தீவில் அமுலில் இருந்த கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வருகிறது.
COVID தொற்று உள்ளதாக சோதனை செய்பவர்கள் இனி வரும் காலங்களில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரியவருகிறது.
Prince Edward மாகாணம் அதன் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை வியாழக்கிழமை (01) நள்ளிரவுடன் முடித்துக் கொள்கிறது.
சுவாச ஒத்திசைவு தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டாய தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்தாலும், நோய் பரவுவதைத் தடுக்க வலுவான பரிந்துரைகள் பொது சுகாதார மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தை விட COVID தொற்றின் எண்ணிக்கை குறைந்த விகிதத்தில் இருக்கும் நிலையிலும் , சுவாச தொற்றுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரைக்கிறது.