December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய கால்பந்து அணியின் இறுதி ஆட்டம்

2022ஆம் ஆண்டின் ஆண்களுக்கான FIFA உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கனடிய ஆணி வியாழக்கிழமை (01) களம் இறங்குகிறது.

இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் கனடிய ஆணி தோல்வியடைந்தது

கடந்த புதன்கிழமை (23) முதலாவது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை (27) குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை இழந்த கனடிய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஆனாலும் F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது.

இந்த ஆட்டம் வியாழன்று மொரோக்கோ அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக கனடிய அணி 10.5 அமெரிக்க மில்லியன் டொலர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் Bell கனடா

Lankathas Pathmanathan

71 சதவீதமான ஆசனங்களை வென்றார் Legault!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 24, 2022 (செவ்வாய்)

Lankathas Pathmanathan

Leave a Comment