December 12, 2024
தேசியம்
செய்திகள்

மன்னரின் மூன்று நாள் கனடிய விஜயத்தின் செலவு $1.4 மில்லியன்

மன்னர் சார்லசின் இந்த ஆண்டின் மூன்று நாள் கனடிய விஜயம் கனடியர்களுக்கு குறைந்தது $1.4 மில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது.

May 17ஆம் திகதி ஆரம்பமான இந்த பயணம் 19ஆம் திகதி வரையில் சுமார் 57 மணி நேரம் நீடித்தது.

அப்போது Wales இளவரசராக இருந்த சார்லஸ், Newfoundland, Ontario, Northwest Territories ஆகிய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன் மூலம் இந்த பயணம், ஒரு மணி நேரத்திற்கு $25,000 மேல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த $1.4 மில்லியன் அரச, இராணுவ, காவல்துறையினரின் சம்பளம் அல்லது சாதாரண செயல்பாட்டு செலவுகள் அடங்கவில்லை.

கனடாவிற்கு இளவரசர் மேற்கொண்ட இந்த விஜயம் இராணி எலிசபெத்தின் 70 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அமைந்தது.

Related posts

கனடா திரும்பும் பயணிகள் மீண்டும் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

Lankathas Pathmanathan

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment