தேசியம்
செய்திகள்

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் Ontario

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை இரத்து செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பை Ontario அரசாங்கம் மேல்முறையீடு செய்யவுள்ளது.

இந்த மசோதா ஊதிய உயர்வை வருடத்திற்கு ஒரு சதவீதமாக மூன்று ஆண்டுகளாக கட்டுப்படுத்துகின்றது.

இந்த மசோதாவால் பாதிக்கப்பட்ட பல தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் 2019 இல் நடைமுறைக்கு வந்த சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

Bill 124, விண்ணப்பதாரர்களின் உரிமைகளை மீறுகிறது என மசோதாவை இரத்து செய்யும் செவ்வாய்கிழமை (29) தனது முடிவில் நீதிபதி Markus Koehnen கூறினார்.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாக கூறிய அரசாங்க பேச்சாளர், இதனை மேல்முறையீடு செய்வது எங்கள் நோக்கம் என கூறினார்.

Ontario மாகாணத்தின் பற்றாக்குறையை நீக்குவதற்கு காலவரை கொண்டு ஒரு அணுகுமுறை என இந்த மசோதா குறித்து Doug Ford அரசாங்கம் தெரிவித்தது.

Related posts

Quebecகில் தேடப்படும் குற்றவாளி கைது

Lankathas Pathmanathan

கனடியர்கள் தடுப்பூசிகளை எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம்!

Gaya Raja

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment