2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக கனடிய அணி 10.5 அமெரிக்க மில்லியன் டொலர்களை பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை (27) வெளியேற்றப்பட்டது.
ஆனாலும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக FIFAவிடமிருந்து 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கனடிய அணி பெற்றுள்ளது
ஞாயிறுகுரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை கனடிய அணி இழந்துள்ளது.
ஆனாலும் F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (01) மொரோக்கோ அணிக்கு எதிராக கனடிய அணியின் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.