Toronto பெரும்பாகத்தில் உள்ள இரண்டு பொதுப் பாடசாலைகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு வெடிகுண்டு மிரட்டல்களை Toronto காவல்துறையினர் விசாரித்தனர்.
Islington Junior Middle School, Bloorlea Middle School ஆகிய பாடசாலைகளுக்கு எதிராக திங்கட்கிழமை இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்த இரண்டு வெடிகுண்டு மிரட்டல்களை விசாரித்த காவல்துறையினர் பாடசாலைகள் பாதுகாப்பானவை என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.