LGBTQ சமூகத்திற்கு எதிரான கனடாவுக்கான ரஷ்ய தூதரகத்தின் கருத்துக்களை கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டித்துள்ளார்.
இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க கனடாவுக்கான ரஷ்ய தூதரை வெளியுறவு அமைச்சர் Melanie Joly வரவழைத்துள்ளார்.
மேற்குலகம் ரஷ்யாவின் மீது குடும்ப விழுமியங்களை திணிப்பதாக சமீபத்திய நாட்களில், Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகம் Twitter, Telegram போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.
ரஷ்யாவின் கருத்துக்களை வெறுக்கத்தக்க பிரச்சாரம் என Joly விமர்சித்தார்.
ரஷ்யர்கள் மீண்டும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் என Joly தனது அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
ரஷ்யாவின் இந்த நகர்வை அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல் என கனடாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் Pascale St-Onge கண்டித்தார்.