தேசியம்
செய்திகள்

அவசியமானது: அவசரகாலச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் Trudeau

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவை அவசியமானது என பிரதமர் Justin Trudeau நியாயப்படுத்தினார்.

அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (25) பிரதமர் Trudeau சாட்சியமளித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அவசர காலச் சட்டத்தை ஏன் பயன்படுத்தினார் என்பதை பிரதமர் தனது சாட்சியத்தில் விளக்கினார்.

முன்னோடியில்லாத அதிகாரங்களைச் செயல்படுத்துவதற்கான தனது வரலாற்று முடிவின் மையக் காரணி, அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்ற அச்சம்தான் என்பதை வெளிப்படையாக பிரதமர் வெள்ளிக்கிழமை தனது சாட்சியத்தில் வெளிப்படுத்தினார்.

CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உயர்மட்ட பொது ஊழியர்கள், அமைச்சர்கள் என பல தரப்பினரும் அவரச கால சட்டத்தை செயல்படுத்த தனக்கு வழங்கிய அனைத்து ஆலோசனைகளையும் ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை எடுத்ததாகவும் பொது ஒழுங்கு அவசர ஆணையத்திடம் Trudeau தெரிவித்தார்.

அவசர காலச் சட்ட உபயோகம் தொடர்பான பயனுள்ள உரையாடல்கள் February 10ஆம் திகதி ஆரம்பமானது என பிரதமர் தனது சாட்சியத்தின் போது கூறினார்.

ஒரு பிரதமரின் பொறுப்பு கடினமான முடிவுகளை எடுத்து மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாகும் என கூறிய Trudeau, கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஏதாவது செய்ய வேண்டிய தருணமாக அது அமைந்தது என கூறினார்.

ஆறு வாரங்கள் தொடர்ந்த அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி அறிக்கை, பரிந்துரைகளுடன் February மாதம் 20ஆம் திகதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்கும் David Johnston?

Lankathas Pathmanathan

Quebec புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது

Lankathas Pathmanathan

ஆரம்பமானது 47வது Toronto சர்வதேச திரைப்பட விழா

Lankathas Pathmanathan

Leave a Comment