February 23, 2025
தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: Freeland சாட்சியம்

Ottawaவில் நிகழ்ந்த முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland தெரிவித்தார்.

அவசரகாலச் சட்ட விசாரணையில் வியாழக்கிழமை (24) Freeland சாட்சியமளித்தார்.

போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பொது ஒழுங்கு அவசர நிலையை அறிவிக்கும் Liberal அரசாங்கத்தின் முடிவை துணை பிரதமராக அவர் நியாயப்படுத்தினார்.

முற்றுகை போராட்டம் குறித்த அமெரிக்காவின் கவலை கனடாவிற்கு ஆபத்தான தருணம் என Freeland விபரித்தார்.

ஒரு பொருளாதார அச்சுறுத்தல் ஒரு தேசிய அச்சுறுத்தலாகும் என தனது சாட்சியத்தில் Freeland குறிப்பிட்டார்.

ஒரு நாடு என்ற வகையில் எமது பாதுகாப்பு எமது பொருளாதார பாதுகாப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என நம்புவதாக நிதி அமைச்சரான Freeland கூறினார்.

வாகனத் துறையில் இந்த போராட்டத்தின் எல்லை முற்றுகைகள் ஏற்படுத்திய கடுமையான தாக்கம் குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தான் நடத்திய உரையாடல்களை Freeland தனது சாட்சியத்தில் விபரித்தார்.

நிதி அமைச்சராக வங்கிகளுடன் அவர் நடத்திய ஒரு முக்கிய தொலைபேசி அழைப்பை குறித்தும் Freeland நினைவு கூர்ந்தார்.

இந்த போராட்டம் எல்லை தாண்டிய வர்த்தகம், முக்கிய கனடா-அமெரிக்க விநியோகச் சங்கிலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மூத்த அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய கவலையை தனது சாட்சியத்தில் அவர் வெளிப்படுத்தினார்.

Ambassador பாலத்தின் முற்றுகை குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் உயர்மட்ட பொருளாதார கொள்கை ஆலோசகர் மிகவும் கவலையுடன் இருந்ததையும் Freeland நினைவு கூர்ந்தார்.

அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (25) பிரதமர் Justin Trudeau சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

கனடிய மாகாணங்களில் தொடரும் TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

Albertaவில் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளது: தலைமை மருத்துவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment