முற்றுகை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தின் உபயோகம் பரிசீலிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுப்பியவர்களில் நீதி அமைச்சர் David Lametti முதன்மையானவர் என தெரியவருகிறது.
தொடரும் அவசரகாலச் சட்ட விசாரணையில் புதன்கிழமை (23) தொடர்ந்தும் அமைச்சர்கள் சாட்சியமளித்தனர்.
இவர்களில் நீதி அமைச்சர் முதலாவதாக சாட்சியமளித்தார்.
தனது தலைமை அதிகாரியுடனான ஒரு குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் போராட்டக்காரர்களை உடனடியாக அகற்றுவது குறித்து அமைச்சர் Lametti January 30ஆம் திகதி கேள்வி எழுப்பினார் என விசாரணையில் தெரியவந்தது.
அமைச்சர் Lametti தவிர பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தும் புதனன்று சாட்சியமளித்தார்.
அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (25) சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.