36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக் கோப்பை உதைபந்தாட்ட ஆட்டம் புதன்கிழமை (23) நடைபெறுகிறது.
கனடிய ஆண்கள் தேசிய அணி 1986ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக உலகக் கோப்பைக்கு திரும்புகிறது.
பெல்ஜியத்திற்கு எதிராக கனடிய அணி களமிறங்குகிறது.
உலக தரவரிசையில் 41வது இடத்தில் உள்ள கனடிய அணி 2ஆவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் கிழக்கத்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்த ஆட்டத்தை தவிர கனடிய அணி முதலாவது சுற்றில் மேலும் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்கிறது.