தேசியம்
செய்திகள்

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் எட்டிய ஒப்பந்தம், தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் என கல்வி அமைச்சர் Stephen Lecce தெரிவித்தார்.

கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியதால் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.

கல்வி ஊழியர்களும் அரசாங்கமும் ஞாயிற்றுக்கிழமை (20) ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியதால், Ontarioவில் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.

CUPE எனப்படும் கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும், Ontario மாகாணத்திற்கு இடையே வார இறுதியில் தொடர்ந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

மொத்தம் 171 நாட்களாக இரு தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த ஒப்பந்தம் CUPE உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (24) ஆரம்பமாகி வார இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

Gaya Raja

நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment