September 13, 2024
தேசியம்
செய்திகள்

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி நினைவு கூரப்பட்டார்

கடமையின் போது கொல்லப்பட்ட மூத்த Toronto காவல்துறை அதிகாரி அவரது குடும்பத்தினராலும்  சக பணியாளர்களினாலும் நினைவு கூரப்பட்டார்

55 வயதான Constable Jeffrey Northrup, இந்த மாதம் 2ஆம் திகதி வாகனம் மோதியதில் கொல்லப்பட்டார்.

திங்கட்கிழமை BMO விளையாட்டுத்  திடலில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கில் 4,700 பேர் வரை கலந்து கொண்டனர். இவர்களில் Ontario முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வர் John Tory, Calgary, Edmonton, Quebec, Vancouver ஆகிய நகரங்களில் இருந்து வருகை தந்த காவல்துறை அதிகாரிகளும் அடங்குகின்றனர்

Toronto நகர சபையின் வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்ட  ஒரு கொள்ளை சம்பவம் குறித்து விசாரணைக்கு சென்ற போது  Northrup வாகனத்தால் மோதி கொல்லப்பட்டார்.

இதனை வேண்டுமென்றே மேற்கொண்ட தாக்குதல் என விசாரணையாளர்கள் விவரித்தனர். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியின் மரணத்தில் ஒரு சந்தேக நபர் மீது  முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவானது .

1989ஆம் ஆண்டு Toronto காவல்துறையில் பணியாற்ற ஆரம்பித்த Northrup, 31 வருட காலம் காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
January மாதம் 2011ஆம் ஆண்டின் பின்னர் கடமையில் கொல்லப்பட்ட முதல் Toronto காவல்துறை அதிகாரி Northrup ஆவார்.  

Related posts

Conservative அதிகார சபை அங்கத்தவர் கட்சியை விட்டு வெளியேறினார்

Lankathas Pathmanathan

Ontario தேர்தல் வரலாற்றில் இம்முறை மிகக் குறைந்த பேர் வாக்காளித்தனர்

Lankathas Pathmanathan

கனடாவை வந்தடைந்த முதலாவது COVID-19 தடுப்பூசி

Lankathas Pathmanathan

Leave a Comment