February 23, 2025
தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

பொது ஒழுங்கு அவசர ஆணைய அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர், உயர்மட்ட பிரதமர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளனர்.

அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி வாரத்தில் பிரதமர் Justin Trudeau சாட்சியமளிக்க உள்ளார்.

பிரதமரின் உயர்மட்ட ஊழியர்கள், அமைச்சரவையின் பல உறுப்பினர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளார்.

பிரதமரின் உயர்மட்ட ஊழியர்கள் மூவர் சாட்சியாளர் பட்டியலில் இணைக்கப்பட்டதை வெள்ளிக்கிழமை (18) ஆணையம் உறுதிப்படுத்தியது

அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlanc, நீதி அமைச்சர் David Lametti, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland ஆகியோர் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளனர்.

கடந்த ஐந்து வாரங்களில், அவசரகாலச் சட்டத்தின் மத்திய அரசின் கோரிக்கையை ஆராயும் ஆணையம் 62 சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்களை செவிமடுத்து உள்ளது

Related posts

Ontario மாகாண தேர்தல் பிரச்சார வரவு செலவு திட்டம் வெளியீடு

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Leave a Comment