February 22, 2025
தேசியம்
செய்திகள்

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

6.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைதாகியுள்ளனர்.

Mississauga, Brampton உட்பட Toronto பெரும்பாகம் முழுவதும் இயங்கியதாக கூறப்படும் வாகன திருட்டு வளையத்தை காவல்துறையினர் முறியடித்தனர்.

இதில் சுமார் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான 19 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 மில்லியன் டொலர் மதிப்புள்ள மாற்றப்பட்ட வாகன அடையாள எண்களைக் (altered vehicle identification numbers) கொண்ட மேலும் 50 வாகனங்களும் மீட்கப்பட்டன.

ஏழு பேர் கைது செய்யப்பட்ட இந்த விசாரணையில் மொத்தம் 116 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன

கைதானவர்களில் Mississauga நகரை சேர்ந்த 24 வயதான கஜன் கருணாநிதி, 30 வயதான ஆதவன் முருகேசபிள்ளை ஆகிய தமிழர்களும் அடங்குகின்றனர்

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனேடிய விமானப் பயண துறையில் போட்டி அவசியம்: NDP

Lankathas Pathmanathan

FIFA 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam

Leave a Comment