தெற்கு Ontarioவின் சில பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
இந்த வார இறுதியில் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 60 centimeters வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
குறிப்பாக Niagara பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
Niagara பகுதியில் வியாழன் (17) இரவு ஆரம்பமாகும் பனிப்பொழிவு ஞாயிற்றுக்கிழமை (20) காலை வரை தொடரவுள்ளது.
Niagara பகுதி தவிர Barrie, Collingwood, Midland, Owen Sound, Kingston, உள்ளிட்ட பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.