இரு நாட்டு தலைவர்கள் உரையாடல் விவரங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக சீன அதிபர் கனடிய பிரதமர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (15) நிகழ்ந்த இரு நாட்டு தலைவர்கள் பேச்சு குறித்த விவரங்கள் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது பொருத்தமற்றது என பிரதமர் Justin Trudeauவிடம் சீன அதிபர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சீன அதிபரை இடைமறித்த Trudeau, கனடாவில் சுதந்திரமான, திறந்த உரையாடலின் முக்கியத்துவத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் எடுத்துரைத்து பதிலளித்தார்.
இந்தோனேசியாவின் பாலியில் நிகழ்ந்த G20 இறுதி அமர்வின் போது இந்த கருத்து பரிமாற்றம் நிகழ்ந்தது.
G20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் Trudeau, சீன அதிபருடன் செய்வாயன்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டார்.
தவிரவும் செவ்வாய்க்கிழமை தனது சீனப் பிரதிநிதியுடன் கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly கலந்துரையாடினார்.