இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவை செவ்வாக்கிழமை (15) Toronto பெரும்பாகம் எதிர்கொண்டது.
செவ்வாயன்று Toronto பெரும்பாக்கத்திற்கு குளிர்கால பயண எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டிருந்தது.
செவ்வாய் பின்னிரவில் மேலும் ஐந்து முதல் 10 centimetre வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.
புதன்கிழமை (16) இலேசான பனிப்பொழிவு Toronto பெரும்பாகத்தில் எதிர்வு கூறப்படுகிறது.
செவ்வாயன்று ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவு, நகரம் முழுவதும் பல வீதி விபத்துக்களுக்கு காரணமாகியது.