December 12, 2024
தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது என பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomas கருதியதாக புதிதாக வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் அவசரகாலச் சட்ட விசாரணையில் செவ்வாக்கிழமை (15) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் இந்த தகவல் வெளியானது.

முதன் முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் ஒரு பகுதியை இன்று வெளியான இந்த தகவல் வழங்குகின்றது.

அவசரகாலச் சட்ட அறிவிக்கப்பட்ட தினம், பிரதமரின் தேசிய பாதுகாப்பு உளவுத்துறை ஆலோசகர் எதிர்கொள்ளப்படும் அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டை கோரும் மின்னஞ்சல் ஒன்றை எழுதியதாக தெரியவருகிறது.

இந்த அச்சுறுத்தல் மதிப்பீட்டிற்கான கோரிக்கை RCMPயின் உளவுத்துறை, சர்வதேச காவல் துறையின் நிர்வாக இயக்குனரின் கவனத்திற்கு சென்றது.

இந்த மின்னஞ்சலுக்கு சில நிமிடங்களுக்குப் பின்னர், தேசிய நலன், தேசிய அச்சுறுத்தல் குறித்து மற்றொரு மின்னஞ்சலை அவர் மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலி

Lankathas Pathmanathan

கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை: Trudeau விமர்சனம்

Leave a Comment