தேசியம்
செய்திகள்

தேசிய நினைவு தின விழாவை தவற விடவுள்ள பிரதமர் Trudeau

Cambodia உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் காரணமாக தேசிய நினைவு தின விழாவை பிரதமர் Justin Trudeau தவற விடவுள்ளார்.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ASEAN உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வியாழக்கிழமை (10) மாலை Cambodiaவுக்கு பயணமாகவுள்ளார்.

சனிக்கிழமை ஆரம்பமாகும் இந்த உச்சி மாநாடு, 10 நாள் காலப்பகுதியில் Trudeau கலந்து கொள்ளும் நான்கு சர்வதேச கூட்டங்களில் முதல் மாநாடு ஆகும்.

முதல் உலகப் போர் முடிவடைந்த 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரான்சில் நடைபெற்ற உலகத் தலைவர்களின் சர்வதேச கூட்டத்தில் கலந்து கொண்டதால், 2018ஆம் ஆண்டு தேசிய நினைவு தின விழாவில் Trudeau பங்கேற்கவில்லை.

இந்த வார ஆரம்பத்தில் New Brunswick மாகாணத்தில் இராணுவ வீரர்களை பிரதமர் சந்தித்தார்.

அங்கு அவர் கனடாவுக்கான சேவையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Related posts

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றம், தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Lankathas Pathmanathan

தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா நெருக்கமாக செயல்படுகின்றது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment