தேசியம்
செய்திகள்

Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும்: முதல்வர் Doug Ford

அதிகரித்து வரும் COVID தொற்றின் பரவல் மத்தியில் Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் முகக் கவசங்களை அணியுமாறு Ontario வாசிகளை ஊக்குவிப்பதாக முதல்வர் கூறினார்.

ஆனாலும் மாகாணத்தில் முகக் கவச கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவிப்பது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

குறிப்பாக பாடசாலைகளில் முகக் கவசங்களை மீண்டும் அரசாங்கம் கட்டாயமாக்குமா என்பதை முதல்வர் உறுதிப்படுத்தவில்லை.

மாறாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Mooreரின் சமீபத்திய ஆலோசனையை Ford மீண்டும் வலியுறுத்தினார்.

Ontario வாசிகள் தங்கள் காய்ச்சல் தடுப்பூசிகள், COVID booster தடுப்பூசிகளை பெறவும் Ford ஊக்குவித்தார்.

பாடசாலைகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முகக் கவச கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து Torontoவின் தலைமை மருத்துவர் ஆராய்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

Lankathas Pathmanathan

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Lankathas Pathmanathan

வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.

Lankathas Pathmanathan

Leave a Comment