தேசியம்
செய்திகள்

புற்றுநோய் சிகிச்சைக்காக அரசியலில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்

மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக Newfoundland and Labrador மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Yvonne Jones அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளார்.

மார்பக புற்றுநோய் முதலில் கண்டறியப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டதாக வியாழக்கிழமை (10) Labrador தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jones கூறினார்.

அறுவை சிகிச்சை, அதனை தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்வதற்காக விடுப்பு எடுப்பதாகவும், முடிந்தவரை தனது அலுவலக ஊழியர்களுக்கு உதவ தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடுப்பு குறைந்தது இரண்டு மாதங்கள் நீடிக்கும் எனவும் கூறிய Jones, அதன் பின்னர் தனது சூழ்நிலையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மெய்நிகர் வழியாக நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளதாக Jones கூறினார்.

Related posts

கனடாவில் இன்று ஐந்தாயிரம் தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

CSIS தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

May மாதம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை கனடா பெறும்

Gaya Raja

Leave a Comment